[X] Close

கிழக்கையும் மேற்கையும் இணைத்த கலைஞர்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 11:34 am
  • அ+ அ-

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாநேற்று கலையரங்க வளாகத்தில் நடந்தது.

விழாவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க (எம்எச்ஏஏ) செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் வரவேற் றார். சங்கத் தலைவர் ஜி.மோகன கிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் ஆர்.சுதாமுன்னிலை வகித்தார். சங்கப் பொருளாளர் எஸ்.காமராஜ் ஆண்டறிக்கை வாசி்த்தார்.

விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பவானி சுப்பராயன், என்ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்றுகுத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். சங்க உறுப்பினர்களான உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்றனர். நீதிபதி பவானி சுப்பராயன், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக கவிதை எழுதி பெண்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் எனகுறிப்பிட்டார்.

அதேபோல நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இன்னிசைக் குழுவினரின் பக்க வாத்தியத்துடன் ‘ராஜ ராஜ சோழன் நான்’என்ற பாடல் பாடி அனைவரது கைதட்டல்களையும் பெற்றார். சிறப்பாக செயல்பட்ட வழக்கறிஞர்கள் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். நூலகர் ஜி.ராஜேஷ் நன்றி கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close