[X] Close

வேலை செய்த வீட்டில் நகை திருடிய பணிப்பெண் சிறையில் அடைப்பு


arrest-for-theft

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 10:43 am
  • அ+ அ-

வேலை செய்த வீட்டில் நகைகளை திருடிய இளம்பெண், கண்காணிப்பு கேமரா உதவியுடன் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் சுனைனா புகழ்யா (37). இவரது வீட்டில் சென்னை நன்மங்கலத்தை சேர்ந்த நிரோஷா (27) என்பவர் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சுனைனா புகழ்யாவின் வீட்டில் இருந்த தங்க நகைகள் படிப்படியாக குறைந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் பெற்று ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது, வீட்டில் வேலை செய்து வந்த நிரோஷா நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close