[X] Close

ராமநாதபுரம் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எங்கே? - இதுவரை பிரச்சாரம் தொடங்காததால் கட்சியினர் ஏமாற்றம்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 10:19 am
  • அ+ அ-

ஏகாம்பரநாதர் கோயிலில் புதியசோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி நேற்று சென்னையில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் 1600 ஆண்டுகள் பழமைவாய்ந்த சோமாஸ்கந்தர் சிலை உள்ளது. இந்தச் சிலையைக் கொண்டு பிரம்மோற்சவ விழாவின்போது சுவாமி வீதியுலா நடைபெறும். கடந்த 2016-ம் ஆண்டுவரை இந்தச்சிலையைக்கொண்டுதான் வீதியுலா நடைபெற்று வந்தது.

அதன்பின்னர் இந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாகக் கூறி அறநிலையத் துறை மூலம் புதிய சிலை செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக புதிய சோமாஸ்கந்தர் சிலைதான் வீதியுலா வந்தது.

இந்நிலையில் இந்தப் புதிய சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால், போலீஸார் இந்தப் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, சிலை செய்த மாசிலாமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன் உட்பட 9 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. பின்னர் இந்தவழக்கை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சிலை செய்வதற்கு அனுமதி வழங்கிய கூடுதல்ஆணையர் (திருப்பணி) கவிதாவைகூடுதலாகச் சேர்த்து கடந்த ஜூலைமாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழைய சிலையை சீர்செய்து சுவாமி வீதியுலா நடத்தப்பட்டது. இந்த வீதியுலா நடந்த சில மணி நேரங்களுக்குள் இந்து சமய அறநிலையத் துறையின் முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

வீரசண்முகமணி

 

இதுகுறித்து சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, இக்கோயிலில் சிவன்,பார்வதியுடன் கூடிய சோமாஸ்கந்தர் சிலையில் இருந்து ஸ்கந்தர் சிலை அறுத்து எடுத்து திருடப்பட்டது தொடர்பான வழக்கானது கண்டுபிடிக்க முடியாமல் முடித்து வைக்கப்பட்டன. அறுத்து எடுக்கப்பட்ட ஸ்கந்தர் சிலை வெளிநாட்டு மியூசியத்தில் உள்ளதாக தெரிகிறது. புதிய உற்சவ சிலை செய்வதற்கு கருத்துரு வழங்கிய முத்தையா ஸ்தபதி பழையசிலையில் 75 சதவீதம் தங்கம்இருப்பதாக கருத்துரு வழங்கியுள்ளார். இந்த கருத்துருவைக் கொண்டு புதிய சிலை செய்வதற்கு முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர் கவிதா ஆகியோர் 50 கிலோ எடையில் புதிய சிலை செய்ய உத்தரவு பிறப்பித்தனர். ஆனால், 111 கிலோ எடையில் சிலை செய்யப்பட்டுள்ளது. அதிக எடையுடன் சிலை செய்தால் அதிக தங்கம் வசூலிக்க முடியும் என்ற நோக்கத்திலேயே அதிக எடையில் சிலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அளவுக்கு அதிகமாகதங்கம் வசூலித்து கணக்கில்காட்டாமல் முறைகேடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியை சென்னையில் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம்’ என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close