[X] Close

பிரதமர் மோடியின் 'மிஷன் சக்தி' பேச்சு விதிமுறைகளுக்கு மாறானது அல்ல: தேர்தல் ஆணையம் விளக்கம்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 10:19 am
  • அ+ அ-

தேர்தல் பணிகளின்போது அருணாச்சலபிரதேச மாநிலத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாக போர்ட்டர்கள் விளங்கி வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல் தெற்கில் அசாம், நாகாலாந்தை எல்லையாகவும், மேற்கில் பூடானை சர்வதேச எல்லையாகவும், வடக்கில் சீனாவை எல்லையாகவும் கொண்டுள்ளது. இடாநகர் இதன் தலைநகராக செயல்படுகிறது.

அருணாச்சலில் மொத்தம் 2 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டதேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 11-ம் தேதியே இங்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆனால் அருணாச்சல் பிரதேசத்தில் தேர்தலை நடத்துவதும், தேர்தல் பணிகளை கையாள்வதும் மிகவும் சிரமமான காரியாகும். மலைசூழ்ந்த இந்தப் பகுதியில் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது மிகவும் கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது.

இவற்றை எடுத்துச் செல்ல போர்ட்டர்கள் (சுமை கூலிகள்) பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களை துணை தொழிலாளர் படை (ஏஎல்சி) என்றும் அழைக்கின்றனர். தேர்தலின்போது இவர்களது பணி தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

இந்த ஏஎல்சி தொழிலாளர் முறை, ஆங்கிலேயர் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1987-ல் அருணாச்சல் பிரதேச மாநிலம் உருவான பின்னர் ஏஎல்சி நியமனம் அடியோடு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தேர்தல் உள்ளிட்ட பணிகளின்போது அவர்கள் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

இவர்கள்தான் வாகனங்கள் செல்ல முடியாத மலைப்பாதைகளில் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை சுமந்து செல்கின்றனர்.

இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கான்கி தரங் கூறும்போது, “பொது விநியோகத்தின் மூலம் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களும், தேசிய பேரழிவின்போதும், புதிய நிர்வாக மையங்கள் திறக்கும்போதும், தேர்தலின்போதும் இவர்களது பணி இன்றியமையாததாகி விடுகிறது” என்றார்.

துணை தலைமை தேர்தல் அதிகாரி லிகென் கோயு கூறும்போது “2014 தேர்தலின்போது 2,100 ஏஎல்சி தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை அதைவிட கூடுதல் தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள். இம்முறை விவிபாட் இயந்திரங்களையும் கொண்டு செல்ல இருப்பதால் அதிக தொழிலாளர் தேவை. அங்கிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு வருவதற்கு 3 நாட்களாகும். இதனால் சில சமயங்களில் தேர்தல் முடிவை அறிவிப்பதில் காலதாமதம் ஏற்படும்” என்றார்.

அருணாச்சலபிரதேசத்தில் மட்டும் எளிதில் அணுக முடியாத நிலையில் மொத்தம் 518 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு வாகனங்களில் செல்ல முடியாது. நடந்து மட்டுமே செல்ல வேண்டிஇருப்பதால் ஏஎல்சி தொழிலாளர்களை பணியமர்த்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது என்று தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். – பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close