[X] Close

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்துக்கு நெல்லையில் ‘சுழி’ போடும் டவுன் ஈசான விநாயகர் கோயில் பகுதி


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 09:07 am
  • அ+ அ-

அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜி.ராமச்சந்திரன், சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 11-ம் தேதி புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ‘பாலியல் கொடூரம் தொடர்பாக அமைச்சர்கள், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல டிஜிபியிடம் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகார் மனுவில், ‘எனது அரசியல் பயணத்தை சீர்குலைக்கவும், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் உண்மைக்கு மாறான செய்தியை திட்டமிட்டு பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக நக்கீரன் வார இதழ் ஆசிரியர் கோபால், வெள்ளிக்கிழமை (நேற்று) விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பினர்.

ஆனால், அவர் நேற்று ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் சிவக்குமார், சைபர் கிரைம் உதவி ஆணையர் வேல்முருகனை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:நக்கீரன் கோபால் ஊரில் இல்லாததால் வர இயலவில்லை. அவரது தரப்பில் சில சட்ட விளக்கங்களை சைபர் கிரைம்உதவி ஆணையரிடம் கூறியுள்ளேன். பொள்ளாச்சி ஜெயராமன் அளித்துள்ள புகாரில் அவரையும், அவரது குடும்பத்தையும் பற்றிஅவதூறான செய்திகள் பரப்பப் பட்டிருப்பதாக கூறியுள்ளார். அது அவதூறான செய்தியாக இருந்திருந்தால், சட்டப்படி அவர் மானநஷ்ட வழக்கோ, இழப்பீடு கேட்டோதான் வழக்கு தொடர முடியும்.

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதையும்தாண்டி அரசே சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது. அவர்கள் இருவரும் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சென்னையில், விசாரணைக்கு அழைப்பது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனால் இந்த சம்மனை திரும்பப் பெற வேண்டும். இந்த சம்மன் சட்டப்படி செல்லாது என்று சொல்லியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close