[X] Close

நம் வெளியீடு: கசப்புகளைக் களையும் ‘இனிப்பு தேசம்’


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 09:00 am
  • அ+ அ-

இரட்டை இலை சின்னத்தை முடக்கவும் தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரியும் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீட்டு மனு

இதை எதிர்த்து தினகரன், சசிகலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

‘இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ், பழனிசாமி தரப்புக்கு ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அதுவரை இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் தினகரன் கோரியிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தற்போது இரட்டை இலை சின்னம் அவர்கள் வசம் உள்ளது. உங்களுக்கு என்ன வேண்டும்’’ என தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலிடம் கேள்வி எழுப்பினர்.

விசாரணை தள்ளிவைப்பு

அதற்கு அவர், ‘‘தேர்தலை சந்திப்பதற்கு ஏதுவாக இடைக்காலமாக எங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்றார். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் வரும் 25-க்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close