[X] Close

ஸ்டெம் செல்லை தானமாக கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பெண் போலீஸ்


stem-cell

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 09:30 am
  • அ+ அ-

ஸ்டெம் செல்லை தானமாகக்கொடுத்து, ஒரு குழந்தையைக் காப்பாற்றிய நாமக்கல் மாவட்ட பெண் போலீஸ் வாசுகிக்கு, மாவட்ட எஸ்பி அருளரசு பாராட்டு தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு மரபணுக்கள் பாதிக்கப்படுவதால், தலசீமியா என்ற ரத்த அணுக்களை அழிக்கும் நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சிகிச்சையளிக்க, அந்த குழந்தையின் ஸ்டெம் செல்லுடன் ஒத்துபோகும் ஸ்டெம்செல் கொண்டவரின் உதவி தேவைப்பட்டது.

டிஜிபி அனுமதியுடன் காவல்துறையில் பணிபுரிபவர்களிடம், ஸ்டெம் செல் தர விருப்புமுள்ளவர்களை கண்டறிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு லட்சம் பேரில், இருவருக்குதான் ஸ்டெம்செல் ஒத்துபோகும் என்ற நிலையில், குழந்தையின் ஸ்டெம் செல்லுடன் ஒத்துப்போகும் ஸ்டெம் செல் கொண்டவரைக் கண்டறியும் பணி தொடங்கியது.

இந்நிலையில், பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸாரிடம் இருந்து ஸ்டெம்செல் பரிசோதனைக்காக பெறப்பட்ட உமிழ்நீர் மாதிரியில், பெண் காவலர் வாசுகி என்பவரது ஸ்டெம் செல் அக்குழந்தையின் ஸ்டெம் செல்லுடன் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அக்குழந்தைக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. தனது ஸ்டெம் செல்லை தானமாகக் கொடுத்து குழந்தையைக் காப்பாற்றிய பெண் போலீஸ் வாசுகியை மாவட்ட எஸ்.பி. பாராட்டி பரிசு வழங்கினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close