[X] Close

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவு: குற்றவாளிகளை கண்டறிவதில் திணறல்? - சிபிஐ விசாரணைக்கு ஏற்று ஒன்றரை ஆண்டுகளாகியும் பலனில்லை


7

  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:57 am
  • அ+ அ-

அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை 15 நாட்களில் தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு பணி மேற்கொண்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை அசாம் மாநிலத்துக்கு மாற்றி யதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது கீழடியில் அகழாய்வு பணி முடிந்து, அறிக்கை தயாரிக்க வேண்டியுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு பிடிவாதம் ஏன்?

அப்போது நீதிபதிகள், ‘‘கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீ கரிக்கப்படும். ஆனால் இந்தவிஷயத்தில் மத்திய அரசு பிடிவாதம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

மேலும் அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத்தை, 15 நாட்களில் தமிழகத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close