[X] Close

நூல் நோக்கு: குரலற்றவர்களின் பெருங்குரலாய்!


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 08:59 am
  • அ+ அ-

தமிழகத்தில் தேர்தல் பணி பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவ படையினர் வருகின்றனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக முதல் கட்டமாக 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் வருகின்றனர். அவர் களில் 6 கம்பெனி படையினர் இன்று (15-ம் தேதி) சென்னை, திருப்பூர், சேலம் பகுதிகளுக்கு வருகின்றனர். இதில் சென்னைக்கு மட்டும் 4 கம்பெனி படையினர் வந்துள்ளனர்.

தொடர்ந்து நாளை (16-ம் தேதி) கோவை, மதுரை, நெல்லை, திருச்சி மாவட்டங் களுக்கு தலா ஒரு குழு என 4 குழுவினர் அந்தந்த மாவட்டங் களுக்கு செல்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இவர்கள் ஒரு கம்பெனிக்கு 90 முதல் 100 பேர் வரை இருப்பார்கள். 80 பேர் களப்பணிக்கு செல்வார்கள். மற்றவர்கள் பாது காப்பு, சமையல் உள்ளிட்ட பணி களை மேற்கொள்வார்கள். தற் போது, இந்த தொழில் பாதுகாப்பு படையினர் நிலையான கண் காணிப்பு குழுவில் பணியமர்த் தப்படுவார்கள்.

மீதமுள்ள 190 கம்பெனி படை யினர், தேர்தலுக்கு முன், அதாவது ஏப்ரல் 13 முதல் 15-ம் தேதிக்குள் தமிழகம் வந்து சேருவார்கள். அவர் களை பணியமர்த்தும் திட்டத்தை தேர்தல் துறை வழங்கும். அவர் களை பிரித்தனுப்புதல், தங்க வைத் தல் உள்ளிட்ட பணிகளை மாநில காவல்துறை மேற்கொள்ளும்.

வேட்பு மனுக்கள்

மாவட்டத்துக்கு ஒரு தொகுதி என்றால் மாவட்ட ஆட்சியரே தேர்தல் நடத்தும் அதிகாரியாக (ஆர்ஓ) பணியாற்றுவார். ஒரு மாவட்டத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மக்களவை தொகுதி கள் இருக்கும் பட்சத்தில் டிஆர்ஓ அல்லது கூடுதல் ஆட்சியருக்கு குறையாத நிலையில் உள்ள அதிகாரி தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணியாற்றுவார். சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஆர்டிஓ நிலையில் உள்ள அலுவலர் கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பணியாற்றுவார்கள். அவர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ம் தேதியில் இருந்து தற் போது வரை ரூ.4 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 380 ரொக்கம், 15 கிலோ வெள்ளி, மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 999 கைத்துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றில் தற்போது வரை 13 ஆயிரத்து 523 துப்பாக்கிகள் காவல்துறையிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 27 துப்பாக்கிகளின் உரிமம் காலாவதியானதை அடுத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 18 துப்பாக்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு தினங்களில் அனைத்து துப்பாக் கிகளும் ஒப்படைக்கப்பட வேண் டும். தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரத்து 351 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் 1,175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 289 பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோலத்தில் வரையப் பட்டிருந்த தாமரைப் பூ வடிவம் தேர்தல் துறையால் அழிக்கப்பட்டுள்ளதே?

இதுதொடர்பாக தற்போதுதான் புகார் வந்துள்ளது. அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கோரப்படும்.

நடத்தை விதிகள்படி அரசியல் கட்சிகளின் கொடிகளுடன் கம்பங் களையும் அகற்ற வேண்டுமா?

கொடிகள் அகற்றப்பட வேண் டும். அதே நேரம், கொடிக்கம்பங்கள் அனைத்தும் போக்குவரத்துக்கு இடையூறாக, அனுமதியின்றி வைக்கப்படுகின்றன. அவ்வாறு அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்படும்.

வருமானவரித் துறையினருட னான ஆலோசனையில் எடுக்கப் பட்ட முடிவுகள் என்ன?

வருமானவரித் துறையினர் எங்கெங்கு பணியமர்த்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோ சித்தோம். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வருமானவரித் துறை அலுவலகங்கள், அலுவலர் கள் இருப்பதில்லை. ஆனால், தேர்தலை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும், வருமானவரித் துறை துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 3 வருமானவரித் துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிக அளவிலான குழுக்கள் பணி யாற்றும். இவர்கள், மாவட்ட தேர் தல் அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள்.

கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1950-ல் இதுவரை எத் தனை அழைப்புகள் வந்துள்ளன?

இதுவரை வாக்காளர் பட்டியல் சந்தேகங்கள், விதிமீறல் குறித்த புகார்கள் உள்ளிட்டவற்றுக்காக 46 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. 8 மணி நேர அடிப்படையில் 3 ஷிப்ட்களாக பணியாளர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்துவிட்டதா?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில் 3 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட் டுள்ளன.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close