[X] Close

5 முதல் 9 டிகிரி வரை உயரும்: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு


chennai-heat

  • kamadenu
  • Posted: 16 Mar, 2019 07:07 am
  • அ+ அ-

தமிழகத்தில் அடுத்த சில தினங் களுக்கு வழக்கத்தை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழ கத்தில் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட் டம் திருத்தணியில் தொடர்ந்து 104 டிகிரி ஃபாரன்ஹீட் அள வுக்கு மேல் பதிவாகி வருகிறது. அடுத்து வரும் நாட்களில் திரு வள்ளூர் மாவட்டத்தில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்ச ரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதி காரிகள் கூறியதாவது:

தமிழகத்தின் உள் பகுதியில் கிழக்கு திசை காற்று வலு வாக வீசாததால், அங்கு வெப்ப நிலை வழக்கத்தை விட அதிக ரித்து வருகிறது.

அதன் விளைவாக அடுத்து வரும் சில தினங்களுக்கு தமிழ கத்தின் உள் மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, திருவண் ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட சுமார் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர்ந்திருக்கும். அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அள வின்படி, அதிகபட்சமாக திருத் தணியில் 101 டிகிரி, தருமபுரி, சேலம் ஆகிய பகுதிகளில் தலா 100 டிகிரி, மதுரை, வேலூர், நாமக்கல், கரூர் பரமத்தி ஆகிய இடங்களில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close