[X] Close

மக்களவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் சீட்டுகளை சரிபார்த்தால் தேர்தல் முடிவுகள் 6 நாள் தாமதமாகும்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்


6

  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 07:53 am
  • அ+ அ-

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியி டுவது உறுதியானதால், தங்களுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாகிவிட்டதாகக் கூறி அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் கணிசமான அளவு உள்ளனர். இதை மனதில் வைத்து அமமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தேர்போகி பாண்டியை நிறுத்த டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அக்கட்சியினர் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாலுகா வாரியாக தேர்தல் அலுவலகம் திறந்து தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜகவை எதிர்த்து வருவதால் அமமுக கட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் முஸ்லிம்களின் ஆதரவும் தேர்போகி பாண்டிக்கு உள்ளது. மேலும் ஆயர், பங்குத் தந்தைகளை சந்தித்து கிறிஸ்தவர்கள் வாக்குகளைப் பெற அமமுகவினர் முயற்சித்து வருகி ன்றனர். இந்நிலையில், சிவகங்கையை பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாக இருந்தும் பாஜகவுக்கு ஒதுக்கியதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே நேரம் அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இங்கு அதிமுக போட்டியிடாததால், அவர்களது வாக்குகளை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று அமமுகவினர் கருதுகின்றனர்.

இதுகுறித்து அமமுகவினர் கூறிய தாவது: அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலைக்காக சிலர் வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது அதிமுக போட்டியிடாததால், அந்த வாக்குகள் அனைத்தும் எங்களுக்கு தான் கிடைக்கும் என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close