[X] Close

சென்னையில் ஆளுநரின் வாகனத்தை முந்திச் சென்ற சொகுசு கார்: அபராதம் விதித்த போலீஸார்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 12:17 pm
  • அ+ அ-

மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவையும் தேர்தலையும் ஒரே நேரத்தில் சுமுகமாக, அமைதியாக நடத்துவது சாத்தியமா என தேர்தல் ஆணையத்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் ஏப். 18-ல் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுமதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. மதுரை சித்திரைத் திருவிழா உலகளவில் பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பர்.

இந்தாண்டு சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப். 15-ல் மீனாட்சி பட்டாபிஷேகம், ஏப். 16-ல் திக்விஜயம், ஏப். 17-ல் திருக்கல்யாணம், ஏப். 18-ல்தேரோட்டம் மற்றும் எதிர்சேவை, ஏப்.19-ல் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் ஏப். 18-ல் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். பிற்பகல் 3 மணி வரை திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். கள்ளழகர்எதிர்சேவையும் அன்று நடைபெறுகிறது. அன்று தேர்தல் நடைபெற்றால் வாக்குப்பதிவு சதவீதம் பாதிக்கப்படும். எனவே மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணைய வழக்கறிஞர்வாதிடும்போது, "மதுரையில்ஏப்.19-ம் தேதி பொது விடுமுறை. இதைக் கணக்கிட்டே ஏப்.18-ல்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் மதுரை தொகுதி தேர்தல் தேதியை மாற்ற முடியாது. அதே நேரத்தில் வாக்குப்பதிவு நேரத்தை இரண்டு மணி நேரத்துக்கு நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம், காவல் துறைஆணையர் தரப்பில் துணை ராணுவத்தினரின் உதவி கொண்டு தேர்தலை அமைதியாக நடத்தமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் மதுரையில் மட்டும் தேர்தலை மாற்ற முடியாது" என்றார்.

அப்போது நீதிபதிகள், அப்படி என்றால் தமிழகம் முழுவதும் தேர்தலை தள்ளி வைக்கலாமே, என்றனர். அதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் திட்டமிடப்பட்ட நிகழ்வு. தமிழகத்தில் மட்டும் தேர்தல் தேதியை மாற்றம் செய்தால் அது பிற மாநிலங்களிலும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றார்.

அதற்கு நீதிபதிகள், "தேர்தலை நடத்துங்கள். ஆனால் அதில் வாக்காளர்கள் முழுமையாகப் பங்கேற்க இயலுமா? என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். கடமைக்காக மட்டும் நடத்தினால் தேர்தலை நடத்துங்கள்" என்றனர்.

அதற்கு தேர்தல் ஆணைய வழக்கறிஞர், "மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 59 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டருக்குள் வாக்காளர்கள் தவிர, பிறர் நுழைய அனுமதி இல்லை. இவ்வாறு பாதுகாப்புடன் அமைதியாகத் தேர்தலை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் பதில் திருப்தியாக இல்லை. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் சித்திரைத் திருவிழாவையும் தேர்தலையும் ஒரே நேரத்தில் சுமுகமாக, அமைதியாக நடத்துவது என்பது சாத்தியமற்றது. கோயிலைச் சுற்றியுள்ள 18 பதற்றமான வாக்குச்சாவடிகளில் 200 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர் தவிர பிறர் நுழைய அனுமதிஇல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்த் திருவிழா நடைபெறும் நிலையில் தேர் செல்வதைக் கருத்தில் கொள்ளாமல் காலை 6 மணிமுதல் தேர்தலை நடத்தத் திட்டமிட்டது எப்படி? கள நிலவரத்தை அறியாமல் அதிகாரிகள் இதுபோலமுடிவெடுத்துள்ளனர் எனத் தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என்று நீதிபதிகள் கூறி விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close