[X] Close

சரவண பவன் நிறுவனருக்கு ஆயுள்: ஜீவஜோதி வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 11:52 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 12-ம் தேதியுடன் கல்வியாண்டு முடிவடைகிறது என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11-ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாக்குச் சாவடி பணிகள் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து கல்விப் பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் பள்ளி வேலைநாட்களை முன்கூட்டியே முடிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 29-ம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்த சூழலில் இதர வகுப்புகளுக்கு 3-ம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3-ம் பருவத் தேர்வுகளை ஏப்ரல் 1-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அதற்கான கால அட்டவணையை தயா ரித்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை உடனே அனுப்ப வேண்டும். இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்துவிடும். எனவே, வேலை நாட்கள் இழப்பை சனிக்கிழமைகளில் ஈடுசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close