[X] Close

பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் முதல்தாள் தேர்வு சற்று கடினமாக இருந்தது: கோடையில் பிற்பகலில் தேர்வு வைப்பதை தவிர்க்க வலியுறுத்தல்


10th-exam

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை சாந்தோம் ரோசரி மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதும் மாணவிகள். படம்; ம.பிரபு

  • kamadenu
  • Posted: 15 Mar, 2019 07:31 am
  • அ+ அ-

பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் முதல்தாள் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் கோடை காலங்களில் மதிய நேரங்களில் தேர்வு நடத்துவதை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மேல்நிலை வகுப்பு களுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்நாளில் மொழிப்பாடம் முதல்தாள் தேர்வு நடைபெற்றது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 3,731 தேர்வு மையங்களில் இருந்து 9.97 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மொழிப்பாட முதல்தாள் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த வினாத்தாளில் உரைநடை கேள்விகள் எளிதாக பதில் அளிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது. அதேநேரம் செய்யுள் பகுதி கேள்விகள் கடினமாக இருந்தன. ஒரு மதிப்பெண் பகுதியிலும் சில கேள்விகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அமைந்திருந்தன. வழக்கத்துக்கு மாறாக 46-வது வினா முழுவதும் புதிய முறையில் இருந்தது. சராசரி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது குறையும் என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டது.

அதேநேரம் முதல்முறையாக இந்த ஆண்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் மதியம் நடத்தப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோடைக்கால தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிப்பதால் மதிய நேரங்களில் தேர்வுக்கு சென்றுவர சிரமமாக உள்ளது. உடல்ரீதியாகவும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் மதிய நேரத்தில் தேர்வு நடத்துவதை தேர்வுத்துறை தவிர்க்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத் தினர்.

இந்நிலையில் மொழிப்பாடம் 2-ம் தாள் தேர்வு 18-ம் தேதி நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு 29-ம் தேதி முடியவுள்ள நிலையில், முடிவுகள் ஏப்ரல் 29 -ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இதேபோல், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், பொருளியல் மற்றும் கணினி பயன்பாடுகள் பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று காலை நடைபெற்றன. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 2,900 தேர்வு மையங்களில் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் இயற்பியல் மற்றும் பொருளியல் பாடத் தேர்வுகள் எளிதாக இருந்துள்ளன. இயற் பியல் வினாத்தாளில் ஒரு மதிப் பெண் வினாக்கள் மட்டும் சற்று கடினமாக கேட்கப்பட்டதாக பிளஸ் 1 மாணவர்கள் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close