[X] Close

''டோக்கன் கொடுத்தவருக்கு பரிசுப் பெட்டி சின்னம்’’- ராஜேந்திர பாலாஜி கிண்டல்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 10:02 am
  • அ+ அ-

சென்னை அசோக் நகர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரைக் காப்பாற்றிய தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

ஆர்.2 கோடம்பாக்கம் காவல் நிலையம் தற்போது ஆர்.3 அசோக் நகர் காவல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.  இன்று (14.3.2019) காலை சுமார் 08.30 மணிக்கு ஆர்.3 அசோக் நகர் காவல் நிலைய வளாகத்திற்கு வந்த ஒரு நபர் திடீரென தான் கொண்டு வந்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனைக் கண்ட ஆர்.2 கோடம்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் செந்தில்குமார் உடனே, ஓடிச் சென்று அந்த நபர் கையில் வைத்திருந்த தீப்பெட்டி மற்றும் மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவரை தடுத்து காவல் நிலையத்தில் இருந்த கழிவறைக்கு அழைத்துச் சென்று அவர் மீது தண்ணீரை ஊற்றி பின்னர் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்ததன்பேரில், அவரிடம்  விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற நபர் சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த அன்பு (48) என்பதும், அவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அக்கம் பக்கத்தினர் தகராறில் ஈடுபட்டதால், விரக்தியில் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார்.

இதில் விரைந்து செயல்பட்டு நடக்கவிருந்த அசம்பாவித சம்பவத்தை தடுத்து நிறுத்திய ஆர்.2 கோடம்பாக்கம் காவல் நிலைய  தலைமைக் காவலர் செந்தில்குமாரை இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close