[X] Close

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுகவை ‘கலங்கடிக்கும்’ அமமுக: காளிமுத்து மகனுக்கு அரசியல் அந்தஸ்து கிடைக்குமா?


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 09:37 am
  • அ+ அ-

தமிழகத்தில் விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள், பான் புரோக்கர்களைக் கண்காணிக்கும்படி வருமானவரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமி ழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர் தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள்படி பல்வேறு நட வடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறிய தாவது:தேர்தல் நடத்தை விதிகள் கடுமை யாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வரை ரூ.3 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. அதேபோல், பொதுச் சொத்துக்கள், தனியார் சொத்துகளில் அரசியல் கட்சிகள் பெயர், சின்னம் வரைதல், பேனர், போஸ்டர்கள் வைத்தல் போன்றவற்றின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக் கப்பட்டுள்ளன.

அதன்படி, பொதுச் சொத்துக்களில் வரையப்பட்ட 64,385 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல்துறையில் 12 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. மேலும், 24.082 தனியார் சொத்துகளில் இருந்த சுவர் உள்ளிட்ட விளம்பரங்கள் அகற்றப் பட்டு, 875 வழக்குகளும் காவல்துறை யில் பதியப்பட்டுள்ளன.

தற்போது வருமானவரித் துறை யுடன் இணைந்து தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணித்து வரு கிறோம். அதன்படி, மாநிலத்தின் அனைத்து விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்கள், ஓட்டல் கள், பண்ணை வீடுகள் மட்டுமல்லாது, ஹவாலா முகவர்கள், நிதி நிறுவனங் கள், கூரியர் நிறுவனங்கள், பான் புரோக்கர்கள் மற்றும் கணக்கில் வராத பணத்தை கையாளும் இதர நபர்களையும் கண்காணிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

இதுதவிர, ரூ.10 லட்சத்துக்கு அதிக மான சந்தேகப்படும்படியான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக் கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பண நடமாட்டம்

மேலும், பொதுமக்களுக்கு சிக்கல் கள் இல்லாமல், தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள், தேர்தல் ஆணையத் தின் உத்தரவுகள்படி மேற்கொள்ளப் பட்டுள்ளன. ஒரு நட்சத்திர பேச்சாளர் தன் சொந்த செலவுக்கு ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதி உண்டு. இதுதவிர, கட்சி பிரமுகர் ஒருவர் அந்தக் கட்சியின் பொருளாளர் அளித்த அந்தத் தொகைக்கான பயன்பாடு குறித்த சான்றிதழுடன் பணம் கொண்டு சென்றால் அதை நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்ய மாட்டார்கள்.

அதே போல் ரூ.10 லட்சத்துக்கு குறைவான தொகைக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படாது.

நிலை கண்காணிப்புக் குழுவில் உள்ள காவல் அதிகாரி பணம், பொருட்களை அக்குழுவில் உள்ள தாசில்தார் நிலையிலான அதிகாரி முன்னிலையில்தான் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் அந்த காவல் அதிகாரி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். பணம் பறிமுதல் செய்யப்படும்போது, நீதிமன்ற உத்தரவுப்படி அதை டெபாசிட் செய்ய வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் வருமானவரித் துறையிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், பொதுமக்கள் மற்றும் நேர்மையான நபர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைத் தவிர்க்கும் வகையில், பணத்தை உடனடியாக திருப்பி அளிக்க, ஊரக திட்ட முகமையின் திட்ட அதிகாரி, செல வினத்தைக் கண்காணிக்கும் தலைமை அதிகாரி, மாவட்ட கருவூல அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதியில் பறிமுதல் செய்யப்படும் தொகை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்து உடனுக்குடன் பணத்தை திருப்பியளிப்பதற்கான உத்தரவு களை, வாய்மொழியாகவே வழங்குவார்கள். குறிப்பாக 24 மணி நேரத்துக்குள் பணம் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நகராட்சிப் பகுதிகளில் விளம்பரத்துக்கு அனுமதியில்லை

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அளித்த பதில்கள்:

பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் நிலை என்ன?

அந்தப் புகார் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம். சில வீடியோ படங்களை அவர் அளித்துள்ளார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை?

வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாகும்போது எண்ணிக்கை மாறுபடும். தற்போது வரை 7,316 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளன. அதில், அதிக பதற்றமானவை 6,431 வாக்குச்சாவடிகள்.

தமிழக அரசின் ரூ.2,000 திட்டம் தொடர்பாக விளக்கம் பெறப் பட்டுள்ளதா?

தமிழக அரசிடம் இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதே நேரம், இதுவரை இந்த திட்டம் குறித்து எந்த அரசியல் கட்சியும் எங்களிடம் புகார் அளிக்கவில்லை.

சுவர் விளம்பரங்கள் அனுமதி எப்படி?

அரசு கட்டிடங்களில் விளம்பரத்துக்கு அனுமதியில்லை. விளம்பரம் இருந்தால் அகற்றப்பட்டு, செலவும் வசூலிக்கப்படும். தனியார் அனுமதித்தால் அவர்கள் கட்டிடங்களில் விளம்பரம் செய்யலாம். கிராமப்புறங்களில் இந்த விளம்பரங்களுக்கு அனுமதியுண்டு. நகர்ப்புறங்களில் குறிப்பாக நகராட்சிப் பகுதிகளில் விளம்பரத்துக்கு அனுமதியில்லை.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாற்றம் இருக்கிறதா?

புயல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டால் மாற்றப்பட வாய்ப்புள்ளது. தற்போது வாக்குப் பதிவு நாளில் சில பகுதிகளில் திருவிழாக்கள் நடப்பதால் வாக்குப் பெட்டிகளை, எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும் என தகவல்கள் வருகின்றன. இதுதொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் அறிக்கை அளித்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close