[X] Close

விளாத்திகுளம் இடைத்தேர்தல்: பரபரப்பு இல்லாத தேர்தல் களம்


vettathikkulam-election

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 16:49 pm
  • அ+ அ-

சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட விளாத்திகுளம் தொகுதி பரபரப்பு இல்லாமல் காணப்படுகிறது.

மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள விளாத்திகுளம் உள்ளிட்ட 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்.18-ம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதிமுக சீட் யாருக்கு

விளாத்திகுளம் தொகுதியை 2001-ம் ஆண்டில் இருந்து அதிமுக தக்க வைத்து வருகிறது. அதிமுகவில் சீட் பெற முன்னாள் எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சின்னப்பன் ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் காந்தி என்ற காமாட்சி, ஒன்றியச் செயலாளர் பால்ராஜ் ஆகியோரும் இந்த ரேஸில் உள்ளனர் என, அதிமுகவினர் கூறுகின்றனர்.

திமுக முனைப்பு

திமுகவினரும், விளாத்திகுளம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற தீவிர முனைப்பில் உள்ளனர். திமுக சார்பில் மேற்கு ஒன்றியச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், முன்னாள் எம்எல்ஏ என்.கே.பெருமாளின் மருமகள் கலைச்செல்வி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் என பலரும் சீட் பெற முயன்று வருகின்றனர். அமமுகவை பொருத்தவரை ஜோதிமணி உள்ளிட்ட பலர் சீட் பெற முயன்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து தான் போட்டியிடுவது என தீர்மானித்து உள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டி என தனது நிலையை அறிவித்துவிட்டார். மக்கள் நீதி மய்யம், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி உள்ளது. கடந்த 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை விளாத்திகுளம் தொகுதியில் தேர்தல் களைகட்டவில்லை. இதற்கு காரணம் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிக்காததுதான்.

சென்னையில் முகாம்

இதுகுறித்து கட்சியினர் சிலர் கூறும்போது, `வேட்பாளர் அறிவிக்கும் முன் செலவு செய்ய அனைவரும் தயக்கம் காட்டுகின்றனர். அதுதான் தற்போதைய மந்த நிலைக்கு காரணம். மேலும், வேட்பாளர் போட்டியில் உள்ள அனைவருமே சென்னையில் இருக்கின்றனர். அந்தந்த கட்சி தலைமைகளில் இருந்து முறையாக அறிவிப்பு வந்த பின்னரே வேலைகள் தொடங்கும்’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close