[X] Close

வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதமாவதால் நெல்லையில் களைகட்டாத தேர்தல் திருவிழா


election-festivals

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 16:36 pm
  • அ+ அ-

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதமாவதால் திருநெல்வேலியில் தேர்தல் திருவிழா களைகட்டவில்லை.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அத்துடன், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையடுத்து, அரசு அலுவல கங்களில் இருந்த முதல்வர் படம் அகற்றப்பட்டன. அரசு கட்டி டங்கள், பாலங்கள் உள்ளிட்ட வற்றில் அரசியல் கட்சிகள் சார்பில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி டவுன், பாளை யங்கோட்டை உள்ளிட்ட பகுதி களில் அரசு சுவர்களில் ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப் படுத்தினர். தலைவர்களின் சிலை களை மறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அதிகாரி கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனை பணிகள் அனைத் தும் வீடியோவில் பதிவு செய்யப் படுகிறது.

விறுவிறுப்பில்லை

தேர்தலை முன்னிட்டு தலைவர்களின் படங்கள், கொடிகள், பேட்ஜ்கள், கரை வேட்டிகள், துண்டுகள், சின்னங்கள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாகும் என்பதால், வியாபாரிகள் அவற்றை வாங்கி, விற்பனைக்காக குவித்துள்ளனர். இருப்பினும் தேர்தல் பணிகள் விறுவிறுப்படையாததால் இவற்றின் வியாபாரம் மந்தமாக உள்ளது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி யில் பல்வேறு தலைவர்கள் சுற்றுப் பயணம் செய்து, தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், திருநெல்வேலியில் பிரச்சாரம் மந்த நிலையிலேயே உள்ளது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் பல்வேறு இடங்களில் கட்சி கூட்டங்களில் பேசியுள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர்கள் எச்.வசந்தகுமார், மயூரா ஜெயக் குமார், விஷ்ணு பிரசாத், ஜெயக் குமார் ஆகியோரும் திருநெல் வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தேர்தல் பிரச் சார பணியை தொடங்கி வைத்துள்ளனர்.

தொண்டர்கள் எதிர்பார்ப்பு

ஆனால், முக்கிய கட்சிகளான திமுக, அதிமுகவைச் சேர்ந்த தலைவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் இன்னும் தீவிர பிரச்சாரத்தில் இறங்காததால், தொண்டர்களிடம் சோர்வு ஏற்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு, எந்தெந்த கட்சிக்கு எந்த தொகுதி, வேட்பாளர் யார் என்பது தெரிந்த பிறகே தேர்தல் பணிகள் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பாளர்கள் அறிவிப்பை தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சோதனைச் சாவடிகள்

திருநெல்வேலி, தென்காசி ஆகிய 2 மக்களவைத் தொகுதிகளிலும் 9 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

சிவகிரி, சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூர், கங்கைகொண்டான், காவல்கிணறு, புளியரை, மேக்கரை, திருநெல்வேலி உட்பட 9 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாகன சோதனை நடத்த உள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close