[X] Close

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக-திமுக களம் இறங்குமா?


salem-lok-sabha-constituency

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 16:31 pm
  • அ+ அ-

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக போட்டியிடுமா? அல்லது நேரடிப் போட்டியை தவிர்த்து இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேலம் மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை கடந்த 1952-ம் ஆண்டு தேர்தல் முதல் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தல் வரை 16 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 9 முறையும், அதிமுக 4 முறையும், திமுக 3 முறையும் வெற்றிபெற்றுள்ளன. எனவே, சேலம் மக்களவைத் தொகுதியில் அதிகமுறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இம்முறை சேலம் தொகுதியை திமுக கூட்டணியில் கேட்கும் என பேசப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில், சேலம் தொகுதியில் அதிமுக 5,56,546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட திமுக 2,88,936 வாக்குகளை பெற்றது. எனவே, இம்முறை அதிமுக சேலத்தில் களமிறங்கும் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். கடந்த முறை தோல்வியை சந்தித்த திமுக இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் என அரசில் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், காங்கிரஸ் சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு போட்டியிட வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் திமுக மீண்டும் போட்டியிடும் என அக்கட்சியினர் கூறிவருகின்றனர். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த மாவட்டம் எனபதால், மீண்டும் அதிமுக களம் இறங்கும் எனவும் பேசப்படுகிறது. இதனால், சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக-அதிமுக நேரடி போட்டி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இவ்விரு கட்சிகளும் கூட்டணிக் கட்சிக்கு சேலம் மக்களைவைத் தொகுதியை ஒதுக்கீடு செய்யாமல் நேரடியாக களம் இறங்ங்கி தங்கள் செல்வாக்கை காட்டுமா? என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் இரு கட்சிகளின் கூட்டணி ஒதுக்கீட்டுக்கு பின்னர் தெரிய வரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close