[X] Close

முதல்வர் பழனிசாமி பேசும் இடங்களில் நல்ல கூட்டம் கூடுகிறது!- மாஃபா க.பாண்டியராஜன் பேட்டி


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 08:29 am
  • அ+ அ-

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மெஹந்தி பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.

வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பெரம்பூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் மெஹந்தி பிரச்சாரம் நேற்று நடைபெற்றது.

அப்போது, மகளிர் சுய உதவி குழுவினர் தங்களது கைகளில், ‘எனது வாக்கு, எனது உரிமை’, ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மெஹந்தி மூலம் எழுதி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். மேலும், வாக்காளர் தாம் அளித்த வாக்கை உறுதிசெய்திடும் கருவி (விவிபாட்) குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close