[X] Close

அம்பத்தூரை அடுத்த பாடியில் தேமுதிக பிரமுகர் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படை


3

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 06:46 am
  • அ+ அ-

தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்தநிலையில், இதுவரை ரூ.3 கோடியே 7 லட்சத்து 47 ஆயிரத்து 700 மதிப்பு ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், மதுபானங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

பொதுமக்கள், அரசியல் கட்சி யினர் எவ்வளவு தொகை கொண்டு செல்லலாம் என்பதற்கும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறி கொண்டு செல்லப் படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:

மதுரையில் சித்திரைத் திரு விழா தொடர்பாக ஆணையத்தி டம் அறிக்கை அளிக்கப்பட்டுவிட்டதா?

மதுரை மாவட்டத் தேர்தல் அதி காரியிடம் உடனடியாக அறிக்கை அளிக்க கோரப்பட்டுள்ளது. அவர் காவல்துறை, அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளிடம் இருந்து அறிக்கை பெற்று அளிப்பார். அந்த அறிக்கை உடனே தேர்தல் ஆணை யத்துக்கு அளிக்கப்படும். அதன்படி தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் தகவல்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை எத் தனை கண்காணிப்பு மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன?

ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 என 702 நிலை யான கண்காணிப்பு குழுக்கள், அதேபோல் 702 பறக்கும் படை கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு குழு என 234 வீடியோ கண் காணிப்பு குழுக்களும், 234 வீடியோ பார்வையிடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வீடியோ கண்காணிப்புக் குழு வில், வருவாய்த் துறை அலுவலர் மற்றும் ஒரு வீடியோகிராபர் இருப் பார்.

தமிழகத்தில் இதுவரை பறி முதல் செய்யப்பட்டுள்ள தொகை எவ்வளவு?

செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ.92 லட்சத்து 49 ஆயிரத்து 500 ரொக்கமும், ரூ.9 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் பறிமுதல்

மேலும், மதுபானங்கள், வெள்ளி குங்குமச் சிமிழ், தீபவிளக்கு உள் ளிட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைத்துப்பாக்கி உள்ளிட்ட உரி மம் பெற்ற ஆயுதங்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ளதா?

இதுவரை, 3,479 கைத்துப்பாக்கி கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற் றில் 6 துப்பாக்கிகளின் உரிமம் காலாவதியாகியிருப்பது தெரிய வந்துள்ளது. 4 துப்பாக்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட் டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதுவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,312 வழக்குகள் பதியப்பட்டு, 321 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். 814 பேர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி யாணைகள் செயல்படுத்தப்பட் டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லி பயணம்

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் புனித வெள்ளி, ரம் ஜான் காரணங்களை சுட்டிக்காட்டி தேர்தல் தேதிகளை மாற்றி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தேர்தலில் பணப்பட்டு வாடாவைத் தடுக்க புதிய திட்டங் களை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது.

இவை தொடர்பாக விவா திக்க, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வை யாளர்கள் கூட்டத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய் துள்ளது. டெல்லியில் இந்திய தேர் தல் ஆணையத்தில் இன்று தலை மைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, அசோக் லவாசா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற் கின்றனர்.

இதில் பங்கேற்பதற்காக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூ இன்று டெல்லி செல்வார் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close