[X] Close

தனிநபர், வியாபாரிகள் ரூ.50,000 வரை ஆவணங்களின்றி எடுத்துச் செல்லலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


election-model-conduct

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:32 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

ரொக்கப்பணம் கொண்டு செல்வது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:

தமிழகம் முழுவதும் வங்கிகளில் பணப் பரிமாற்றம் கண்காணிக்கப்படுகிறது. ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு திடீரென மேற்கொள்ளப்படும் அதிகஅளவிலான தொகை பரிமாற்றங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்காக அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் வங்கிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும், தொடர் கண்காணிப்பு தொடர்பான அறிக்கைகளையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன சோதனையின்போது ரூ.10 லட்சத்துக்கு அதிகமான தொகை சிக்கினால், அது குறித்து வருமானவரித் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், அவரின் முகவர்கள் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்பில் மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தால் அவை பறிமுதல் செய்யப்படும்.

வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், தொழிலதிபர்கள் அதிக அளவில் ரொக்கத்தை எடுத்துச் சென்றால், பணம் எங்கிருந்து கிடைத்தது, அந்தப் பணம் எதற்காக செலவிடப்படுகிறது என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தொகை பறிமுதல் செய்யப்படும்.

பறிமுதல் செய்யப்பட்ட தொகை, அதற்கான குழுவுக்கு அனுப்பி முழுமையாக ஆய்வு செய்யப்பட்டபின், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். நட்சத்திர பேச்சாளர்கள் தங்கள் கைச் செலவு, பயண செலவுக்காக ரூ.1 லட்சம்வரை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள். தனிநபர்கள், வியாபாரிகளைப் பொறுத்தவரை, ரூ.50,000 வரை ஆவணங்களின்றிஎடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close