[X] Close

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு 


120

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 06:35 am
  • அ+ அ-

கோடைகாலம் இன்னும் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே, மின்தேவை 15,600 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தினசரி மின் தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உள்ளது. இது மழைக் காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித் தும் காணப்படுகிறது. மழை குறைவுகடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக, மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து மின்தேவையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி மின்தேவை மிக அதிக அளவாக 15,440 மெகாவாட் அளவுக்கு அதிகரித்தது. இதுதான் இந்த ஆண்டுக்கான உச்சபட்ச அளவாக இருந்தது. இந்நிலையில், மின் தேவை 15,600 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி இந்த அளவு எட்டப்பட்டது.

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே மின்தேவை இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. வெயில் உச்சத்தை எட்டும்இந்நிலையில், வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் உச்சத்தை எட்டும். அப்போது, மின்தேவையும் 17 ஆயிரம்மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடையில் மின்வெட்டை சமாளிக்க மின்வாரியம் மின்உற்பத்தியையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தேவைப்பட்டால் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close