[X] Close

வடசென்னை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லும் தினக்கூலி தொழிலாளர்கள்: ஆட்கள் பற்றாக்குறையால் வியாபாரிகள் புலம்பல்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 06:30 am
  • அ+ அ-

பொள்ளாச்சி அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதிய கார், பிஏபி கால்வாயில் கவிழ்ந்தது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (44), கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது அண்ணன் பன்னீர்செல்வம். இவரும் கேபிள் டிவி ஆபரேட்டராக உள்ளார். நேற்று முன்தினம் பிரகாஷ் தனது மனைவி சித்ரா (40), குழந்தைகள் பூஜா (8), நந்தனா (3), அண்ணன் மனைவி லதா (42), குழந்தைகள் கவியரசு (11), தாரணி (10), அக்காள் சுமதி (50) ஆகியோருடன் பழநி முருகன் கோயிலுக்கு சென்றுள்ளார்.

இரவு கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் பொள்ளாச்சி வழியாக காரில் கோவை திரும்பியுள்ளார். காரை பிரகாஷ் ஓட்டியுள்ளார். அதிகாலை 1.30 அளவில் பொள்ளாச்சி அருகே கெடிமேடு பகுதியில் வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த குறுகிய பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார், பிஏபி கால்வாயில் விழுந்துள்ளது. கார் பாலத்தில் மோதிய சத்தம் கேட்டதும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து பார்ப்பதற்குள் கார் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

இதுகுறித்து கோமங்கலம் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கால்வாயில் மூழ்கிய காரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கால்வாயில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததாலும் இருள் சூழ்ந்திருந்ததாலும் மீட்புப் பணியில் ஈடுபட முடியவில்லை.

இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் காலை 6 மணிக்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பிஏபி பிரதான கால்வாயில் 900 கனஅடி தண்ணீர் 20 அடி உயரத்துக்கும் மேல் சென்றதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர் உமாபதி, கால்வாயில் குதித்து கார் இருக்கும் இடத்தை கண்டறிந்தார். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் காரின் சக்கரப் பகுதியில் இரும்புக் கயிறை கட்டினார். அதற்குப் பிறகு கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.

பிரகாஷ், குழந்தைகள் பூஜா, தாரணி, சித்ரா, லதா ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கு முன்பு அதிகாலையில் காரில் இருந்து உயிரிழந்த நிலையில் வெளியே வந்த சுமதியின் உடலும் மீட்கப்பட்டது. குழந்தைகள் கவியரசு, நந்தனா ஆகியோரது உடல்கள் கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. கால்வாயில் குழந்தைகளின் உடல்களை தேடும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

தொடரும் விபத்துகள்

கடந்த ஆண்டு இதேபோல், கேரளாவைச் சேர்ந்த 4 பேர் கால்வாயில் காருடன் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. குறுகிய பாலம்தான் விபத்துகளுக்கு காரணம் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close