[X] Close

புதுக்கோட்டையும் மனக் கோட்டையும்; ‘அமைச்சராகும் கனவில்’ களம்காணும் பிரபலங்கள்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 06:14 am
  • அ+ அ-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் ராகுலே வெளியேறு (#gobackrahul), (#gobackpappu) என்ற ஹேஷ்டாக்குகள் இந்திய அளவில் டிரெண்டானது.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போதெல்லாம் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் பாஜக எதிர்ப்பாளர்களும் ட்விட்டரில் மோடியே வெளியேறு (#gobackmodi) என்ற ஹேஷ்டாக்கை இந்திய அளவில் டிரண்டாக்கி வருகின்றனர். #gobackmodi-க்கு போட்டியாக பாஜகவினர் #welcomemodi என்ற ஹேஷ்டாக்கையும் இந்திய அளவில் டிரண்டாக்கினர்.

நேற்று தமிழகம் வந்த ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து #gobackrahul என்ற ஹேஷ்டாக்கையும், #gobackpappu என்ற ஹேஷ்டாக்கையும் பாஜகவினரும் மோடி ஆதரவாளர்களும் இந்திய அளவில் டிரெண்டாக்கினர். அதற்குப் போட்டியாக திமுக, காங்கிரஸ் கட்சியினரும், மோடி எதிர்ப்பாளர்களும் #vanakkamrahulgandhi என்ற ஹேஷ்டாக்கையும் டிரண்டாக்கினர். இதனால் ட்விட்டரில் நேற்று முதலே மோடி, ராகுல் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close