[X] Close

வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் எளிதாக இருந்தன: பிளஸ் 2 மாணவ - மாணவியர் மகிழ்ச்சி


chemistry-exam

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:15 am
  • அ+ அ-

பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் தேர்வுகள் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மொழிப்பாடத் தேர்வுகள் எளிதாக இருந்த நிலையில், கணிதம், வணிகவியல், விலங்கியல் போன்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் கடினமாக இருந்தன. இந்நிலையில் வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றன.

மாநிலம் முழுவதும் 2,944 மையங்களில் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் வேதியியல் வினாத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்றுகடினமாகவும், மற்ற பகுதிகள் எளிதாகவும் இருந்துள்ளன. இதேபோல், கணக்குப்பதிவியல், புவியியல் தேர்வுகளும் எளிதாக இருந்ததால் மாணவர்கள் மிகுந்தமகிழ்ச்சி அடைந்தனர். இந்த 3 பாடங்களில் இந்தாண்டு தேர்ச்சி அதிகரிப்பதுடன், சென்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கணினி அறிவியல், உயிரி வேதியியல், இந்திய கலாச்சாரம், அரசியல் அறிவியல், சிறப்புத் தமிழ் உட்பட பாடங்களின் தேர்வுகள் நாளை (மார்ச் 15) நடைபெற உள்ளன. ஒட்டுமொத்தமாக பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 19-ல் முடிகிறது. அதன்பின் விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 30-ல் தொடங்கி ஏப்ரல் 11-ல் முடிவடையும். தேர்வுமுடிவுகள் திட்டமிட்டப்படி ஏப்ரல் 19-ம் தேதிவெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close