[X] Close

பொள்ளாச்சி விவகாரம்: நாகராஜ் நடத்தும் மதுபானக் கடையை சூறையாடிய மக்கள்


nagaraj-bar

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:12 am
  • அ+ அ-

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைதான நபர் நடத்தி வந்த மதுபான பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

பொள்ளாச்சியில் டாஸ்மாக்மதுபானக் கடை எடுத்து நடத்திவருவதால் அவர் பார் நாகராஜ் எனஅழைக்கப்படுகிறார். பாலியல் வழக்கில் போலீஸில்புகார் கூறிய பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகியான இவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் ஓம்பிரகாஷ் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள நாகராஜின் மதுபான பாருக்குள் பொதுமக்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பாரில் இருந்த மேஜை, நாற்காலிகள், மதுபான பாட்டில்களை உடைத்தனர். மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் ஓட்டம்பிடித்தனர்.

பிறகு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி கிழக்கு போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close