[X] Close

சமச்சீர் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தம் நாளை தொடக்கம்


  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 05:43 am
  • அ+ அ-

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், பாலியல் விவகாரத்தில் மேலும் 3 வீடியோக்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த வீடியோவில் பார் நகராஜ் உள்ளார். இந்த வீடியோவை சபரிராஜன், சதீஷ் ஆகியோர் எடுத்துள்ளதாக அவர்களது பேச்சின் மூலம் தெரியவருகிறது. மேலும், இந்த வீடியோவில் ஒரு பெண்ணை சபரிராஜன் மிரட்டும் காட்சியும் பதிவாகி உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close