[X] Close

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் 3 தொகுதி இடைத்தேர்தலை அவசரமாக நடத்த உத்தரவிட முடியாது: திமுக வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம் 


3

  • kamadenu
  • Posted: 29 Mar, 2019 05:36 am
  • அ+ அ-

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை சிலர் அடித்து, வாக்குமூலம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோரை பொதுமக்கள் சரமாரியாக தாக்குவது, இருவரும் அவர்களிடம் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பது போன்ற வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் வேகமாக பரவி வருகிறது. இவர்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அவரது சகோதரரிடம் இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ளார். அவரும், அவரது உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து இருவரையும் சரமாரியாக தாக்கி விசாரித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

அந்த வீடியோக்களில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் கதறி அழுதபடி இருக்கின்றனர். அவரை சுற்றி இருக்கும் நபர்கள், ‘‘எத்தனை பெண்கள் வாழ்க்கையை கெடுப்பீர்கள். இனி அந்த மாதிரி நீங்க செய்யக்கூடாது. அவங்களை அடித்து நொறுக்குங்க. வீடியோ எடுத்து எத்தனை பேர் வாழ்க்கையை அழித்துள்ளீர்கள். வீடியோ எடுப்பியா?’’ எனக் கேட்டு கல், தடி ஆகியவற்றை கொண்டு சரமாரியாக தாக்குகின்றனர்.

ஏன் காவலில் எடுக்கவில்லை?

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘இந்த விவகாரம் காவல்துறைக்கு வருவதுக்கு முன்னரே, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் செயல்பாடுகளை சிலர் கண்டறிந்து கண்டித்துள்ளனர் என்பது அந்த வீடியோக்கள் மூலம் தெரிகின்றன. காவல்துறையினர் இந்த வழக்கில் 4 வீடியோ மட்டுமே கிடைத்துள்ளது என்கின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் நிறைய பெண்களுடன் பழகி, ஏமாற்றியதை மறைமுகமாக மேற்கண்ட வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

எனவே, காவல்துறையினர் இந்த வழக்கை, கைதான நபர்களிடம் முழுமையாக விசாரிக்காமல், அவசரகதியில் விசாரித்து சிறையில் அடைத்துள்ளதாகவே எண்ண வேண்டியுள்ளது. தவிர, கைது செய்யப்பட்டு 15 நாட்களாகியும் காவலில் எடுத்து ஏன் விசாரிக்கவில்லை எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளதால், அவர்கள் தீர விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close