[X] Close

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் யார்?- முதல்வர் பழனிசாமி, அதிகாரிகள் ஆலோசனை


lok-aaiyudha

முதல்வர் பழனிசாமி | படம்: எல்.சீனிவாசன்.

  • kamadenu
  • Posted: 14 Mar, 2019 10:03 am
  • அ+ அ-

தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் கடந்த ஜூலை யில் சட்டப்பேரவையில் லோக்ஆயுக்தா சட்டம் தாக்கல் செய்யப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர், உறுப்பினர்கள் தேர்வு மற்றும் 26 வகையானபணியிடங்களை உருவாக்குவதற்கான அரசாணை கடந்த ஆண்டுஇறுதியில் பிறப்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, லோக் ஆயுக்தாவில் தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் தமிழக அரசின் முன்னாள் தலைமைவழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஏ.பாரி ஆகியோர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு, ஒவ்வொரு பதவிக்கும் தகுதியானவர்கள்பட்டியலை அரசுக்கு அளிக்கும். அரசு தரப்பில் ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் ஆளுநர்தகுதியானவரை நியமிப்பார்.

இந்நிலையில், கடந்த ஜன.11-ம்தேதி லோக் ஆயுக்தா தலைவர்மற்றும் 2 நீதித்துறை உறுப்பினர்கள், 2 நீதித்துறை சாரா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் 183 பேர்விண்ணப்பித்தனர். அவர்களிடம், தேடுதல் குழுவினர் நேர்காணல் நடத்தினர். அதில் குறிப்பிட்ட நபர்களைத் தேர்வு செய்து தற்போது முதல்வரிடம் அறிக்கையாக அளித்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடந்தது. இதில், பேரவைத் தலைவர் பி.தனபால், தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, தேடுதல் குழு பரிந்துரைத்து அளித்த சீலிடப்பட்ட உறையை பிரித்து யாரைத் தேர்வு செய்வது என்பது பற்றி முதல்வர் விவாதித்தார்.

ஸ்டாலின் புறக்கணிப்பு

இக்கூட்டத்தில், விதிகள்படி பங்கேற்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக, கடந்த டிசம்பரில் லோக்ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை அமைப்பதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close