[X] Close

விசாரணை நடத்தாமல் விளம்பரத்திற்காக கைது செய்வதா?- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 21:04 pm
  • அ+ அ-

தமிழகத்தில் இன்று 10 நகரங்களில்வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது:

கிழக்கிலிருந்து தமிழகம் நோக்கி வீசும் காற்று, தமிழகத்துக்குள் நுழைந்து வடக்கு நோக்கி திரும்பிவிடுகிறது. அதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கிழக்கு திசைக் காற்று வலுவாக இல்லை. 7 டிகிரி வரை உயரும்எனவே அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் சுமார் 7 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்.

நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலத்தில் 102, தருமபுரி மற்றும் திருத்தணியில் தலா 101 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்துக்கு சாதகமான காற்று சுழற்சி எதுவும் இல்லாததால், அடுத்த சில தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close