[X] Close

கிரண்பேடியை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் நாஞ்சில் சம்பத்: அடுத்த ராதாரவியா?


  • kamadenu
  • Posted: 28 Mar, 2019 20:44 pm
  • அ+ அ-

``இன்னும் சில வாரங்களில் ராகுல்காந்திதான் உங்கள் பிரதமர்” என, நாகர்கோவிலில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது: நான் உறுதியாகச் சொல்கிறேன் இன்னும்சில வாரங்களில் உங்கள் பிரதமர் ராகுல்காந்திதான். இந்திய தேசம் பாதுகாப்பானதாக, மதச்சார்பற்றதாக, ஆரோக்கியமானதாக ராகுல் காந்தியின் கைகளில் இருக்கும். அதனால்தான், யாரும் சொல்வதற்கு முன் ராகுல்தான் அடுத்த பிரதமர் என்று சொன்னேன். ராகுல் அவர்களே, ஒளிமயமான இந்தியாவை தாருங்கள்.

வளர்ச்சி, வளர்ச்சி என்கிறார்கள், ஆனால் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. புதிய திட்டங்கள் வரவில்லை. கருப்பு பணத்தை ஒழிப்பதுதான் தனது முதல் வேலை என மோடி சொன்னார். ஆனால், நாட்டில் உள்ள நல்ல பணத்தை எல்லாம் ஒழித்தார்கள்.

இந்து ராமுக்கு பாராட்டு

ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்றார் மோடி. ரஃபேல் ஊழல் ஒன்றே போதாதா? 41 சதவீதம் அளவுக்கு விலையை கூட்டி வாங்கப்பட்டிருக்கிறது என்ற ஆதாரத்தை அம்பலப்படுத்தியவர் இந்து ராம். இதற்காக இந்து ராம் மிரட்டப்படுகிறார். இதற்கெல்லாம் இந்து ராம் பயப்படவில்லை. அதற்காக அவருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக மட்டுமல்ல, இங்கிருக்கும் அனைத்து கட்சிகளும் அவருக்கு பக்கபலமாக இருப்போம்.

மோடி அவர்களே உங்களுக்கு எதிராக இந்துவும் மாறிவிட்டது, நாடும் மாறிவிட்டது. நீங்கள் இந்து, ராம் ஆகிய இரு வார்த்தைகளை வைத்துதான் வெற்றி பெற்றீர்கள். ஆனால், அந்த இரு வார்த்தைகளைப் பார்த்து தற்போது நீங்கள் பயப்பட வேண்டியுள்ளது.

தற்போது, மோடிக்கு காமராஜர் பற்றிய நினைவு வந்துள்ளது. 1966-ல் பசுவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்த டெல்லியில் சங் பரிவார் அமைப்பினர் பெரும் ஊர்வலத்தை நடத்தினர். அதில் ஏற்பட்ட வன்முறையில் காமராஜரின் வீட்டுக்குள் நுழைந்து தீவைத்தவர்கள் அவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு காமராஜரின் பெயரைச் சொல்ல என்ன தகுதி இருக்கிறது.

பாலியல் கொடுமை

தமிழகத்தில் தற்போது பெரும் கொடுமையாக பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் மிரட்டப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்காக மட்டுமல்ல. இது ஜனநாயகப் போர். ராகுல்காந்தியை பிரதமராக்க 40-க்கு 40 என்ற வெற்றியை கொடுப்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசியதாவது:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ரஃபேல் விவகாரத்தில் அனில் அம்பானியுடன் மோடி நடத்திய பேரம் என்ன? என்ற கேள்வியை ராகுல்காந்தி மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் கேட்கிறார்கள். காந்தியா, கோட்சேவா என்பதுதான் மக்கள் மத்தியில் வைக்கப்படும் கேள்வி. மத்தியில் மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சி மலரட்டும், கூட்டாட்சி தத்துவம் மலரட்டும்.

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: மத்தியிலுள்ள மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, இத்தனை கட்சிகளும் ஒரே புள்ளியில் சேர்ந்திருக்கிறோம். மோடி ஆட்சி மீண்டும் அமைந்தால் நாட்டில் மதச்சார்பின்மை இருக்காது, பன்முகத்தன்மை இருக்காது. எனவேதான், நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்திக்கிறோம் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்: மதவாத சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கத்துடன், தமிழகத்தில் திமுக தலைமையில் கொள்கை கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிரணியில் வணிக பேரத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளனர். ராகுல்காந்தி தலைமையில் தேசத்தை காக்க கூட்டணி அமைத்திருக்கிறோம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: சென்னையில் மாணவிகள் மத்தியில் ராகுல்காந்தி பேசும்போது, யார் பிரதமர் என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதமராவார் என்று ராகுல் பதில் அளித்திருந்தார். இந்த பதில் ஒன்றே அவர் பிரதமராகும் தகுதியுள்ளவர் என்பதை நிரூபித்துவிட்டது.

ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர்: கடந்த தேர்தலின்போது மக்களின் கனவுக் குதிரைகளை தட்டிவிட்டு மோடி ஆட்சியை பிடித்தார். மோடி அலை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. இந்தியாவும், தமிழகமும் தற்போது ஆட்சி மாற்றத்துக்கு காத்துக்கொண்டிருக்கின்றன.

கொங்குநாடு மக்கள் கட்சி ஈஸ்வரன்: மோடியை, `டாடி’ என்று சொல்ல தமிழக அமைச்சர்களுக்கு வெட்கமாக இல்லையா?.

இவ்வாறு திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசினர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close