[X] Close

காவிரிக்காக கருப்புச் சட்டையில் கருணாநிதி


cauvery-protest-karunanithi-in-black-shirt

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Apr, 2018 12:23 pm
  • அ+ அ-

காவிரி மேலாண்மை அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றுவருகிறது.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நடைபயணத்தை கருப்புச் சட்டை அணிந்து மேற்கொண்டுவருகிறார். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டை அணிந்து அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி வருகையை எதிர்த்து சென்னையில் விமான நிலையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது. சென்னை விமான நிலையத்தில் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சேர்ந்த சிலர் விமான நிலையத்துக்குள் உள்ள மிக உயரமான பதாகை மீது ஏறி அபாயகரமான சூழலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கார் பார்க்கிங் பகுதியில் உள்ள விளம்பரப் பதாகை மீது ஏறி கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் கீழே இறங்கியதும் போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
இதேபோல், இன்று காலை சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் கருப்புக் கொடி வைக்கப்பட்டது. இதை அங்கிருந்த போலீஸார் உடனே அகற்றினர்.

இந்நிலையில், காவிரிப் போராட்டத்தில் தனது அழுத்தத்தை மேலும் பதிவு செய்யும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கருப்புச் சட்டையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இதேபோல் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்திலும் கருப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close