[X] Close

தேர்வுக்கூடத்துக்குள் மகளை 2 முறை பார்த்து வந்த ஆசிரியருக்கு நோட்டீஸ்


notice-for-teacher

  • kamadenu
  • Posted: 12 Apr, 2018 10:11 am
  • அ+ அ-

திருநெல்வேலிபாளையங்கோட்டையில் 10-ம் வகுப்பு கணித தேர்வின்போது, தேர்வறைக்குள் சென்று தனது மகளை 2 முறை பார்த்து வந்த பள்ளி ஆசிரியருக்கு கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாளையங் கோட்டையில் உள்ள ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், நேற்றுமுன்தினம் 10-ம் வகுப்பு கணிதத் தேர்வு நடைபெற்றது.

10-ம் எண் தேர்வு அறைக்குள் காலை 11 மணிக்கும், பகல் 12.40 மணிக்கும் ஒருவர் சம்பந்தம் இன்றி சென்றுவந்தார். அவர், அங்கு தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவி ஒருவரின் தந்தை எனத் தெரியவந்தது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில், கோட்டாட்சியர் மைதிலி, வட்டாட்சியர் கந்தசாமி, திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் சின்னதுரை உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பள்ளியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையில், தேர்வறைக்குள் நுழைந்தவர் திருநெல்வேலி டவுனில் உள்ள மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி ஆசிரியரும், தேர்வை கண்காணிக்கும் பறக்கும்படையிலுள்ள கண்காணிப்பு அலுவலருமான சுந்தரராஜன் எனத் தெரிய வந்தது.

பறக்கும்படையில் அலுவலராக நியமிக்கப்படும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகள், உறவினர்களின் பிள்ளைகள் தேர்வு எழுதும் மையங்களுக்கு செல்லக்கூடாது என்பது கல்வித்துறையின் விதி. இந்த விதி ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் மீறப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

அதிகாரிகளின் விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், மந்திரமூர்த்தி மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொபு) பாலா தெரிவித்தார்.

தேர்வறைக்குள் நுழைந்த ஆசிரியர் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close