[X] Close

சென்னையில் போலீஸாரை ஏமாற்றி தப்பிய மதுரை கொலைக் குற்றவாளி


  • முத்தலீப்
  • Posted: 14 Feb, 2019 15:42 pm
  • அ+ அ-

ராஜபாளையம் முகவூர் பகுதியைச் சேர்ந்தவர் தொந்தி கணேசன்(26). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டை காவல்நிலைய எல்லையில் கடந்த 2016- ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீஸார் சென்னை அழைத்து வந்தனர். திடீர் நகர் தலைமைக்காவலர் கணேசன், கரிமேடு தலைமைக்காவலர் மகாலிங்கம், ஜெயந்திபுரம் தலைமைக்காவலர் குமரேசன் ஆகியோர் கைதிக்கு பாதுகாவலாக சென்னை அழைத்து வந்தனர்.

 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் மதுரைச் செல்ல கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் பெருங்களத்தூர் வந்தனர்.

கைதி தொந்திப்பாண்டியன் சகஜமாக பேசியதாலும், பொது இடம் என்பதாலும் போலீஸார் அவருக்கு கைவிலங்கு போடாமல் அழைத்துச் சென்றனர். பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி மதுரைச் செல்லும் பேருந்தைப் பிடிப்பதற்காக ஜிஎஸ்டி சாலையைக்கடந்து பெருங்களத்தூர் பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது திடீரென தொந்தி கணேசன் போலீஸார் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரைப் பிடிக்க முயற்சி செய்த போலீஸார் முடியாமல் போகவே இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் பீர்க்கங்கரனை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.

தண்டனைக் கைதியை உரிய பாதுகாப்பு இல்லாமல் அஜாக்கிரதையாக தப்ப விட்ட போலீஸார் 3 பேர் மீதும் நடவடிக்கை வரும் என தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close