[X] Close
 

பிரதமர் வருவதால் எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்?- இதோ விவரம்


traffic-diverted-due-to-pm-s-visit

  • பாரதி
  • Posted: 12 Apr, 2018 08:38 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதால் இன்று காலை 11 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

1. சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு செல்ல முற்படும் வாகனங்கள் கத்திப்பாரா பாலம், கிண்டி பாலம், ஹால்டா சந்திப்பு மற்றும் சின்னமலை வரை சென்று அதன் பிறகு வலதுபுரம் ராஜ் பவன் நோக்கி செல்ல அனுமதியில்லை.
மாறாக அனைத்து வாகனங்களும் சின்னமலையில் இடதுபுறம் சென்று சைதாப்பேட்டை வழியாக நந்தனம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி மூப்பனார் பாலத்தில் நேராக சேமியர்ஸ் சாலை வழியாக திரு.வி.க.பாலம் வழியாக அடையார் செல்ல்லமாம்.

2. அடையாறில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மத்தியகைலாஷ் சந்திப்பு வழியாக நேராக செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாறாக மத்தியகைலாஷ் சந்திப்பில் இடது புறம் திரும்பி டைடல் பார்க் வழியாக எஸ்.ஆர்.பி. டூல்ஸ் சந்திப்பில் வலது புறம் திரும்பி வேளச்சேரி வழியாக விமான நிலையம் செல்லலாம்.

3.மூப்பனார் பாலம் வழியாக காந்தி மண்டபம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே அடையாறு செல்ல வேண்டிய வாகனங்கள் சேமியர்ஸ் சாலை வழியாகவும், விமான நிலையம் செல்ல விரும்பும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு சென்று செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம்.

தொடர்புடைய செய்திகள்

 
 



தமிழ் திசை புத்தகங்கள் - Kindle Edition


[X] Close