[X] Close

வைகோவை அப்பவே நான் சரியாக கண்டிச்சிருக்கணும்: எச்.ராஜா


h-raja-slams-vaiko

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Apr, 2018 08:19 am
  • அ+ அ-

2014-ல் வைகோவை நான் கண்டித்தவிதம் மென்மையானதோ? என ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு போராட்டங்களும் வலுத்துவரும் நிலையில் இன்று (வியாழக்கிழமை) சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்போவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி விமானத்தில் வந்து ஹெலிகாப்டரில் பயணிப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மோடியை 'கோழை, பயந்தாங்கொள்ளி' என விமர்சித்தார்.

இந்நிலையில், இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அதில், "மாண்புமிகு பாரதபிரதமர் மோடி அவர்கள் பற்றி தரக்குறைவாகவும் ஒருமையிலும் வைகோ பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதுபோல் அநாகரீகமாக வைகோ பேசுவது புதிதல்ல. 2014ல் இவருடைய இம்மாதிரி பேச்சினை நான் கண்டித்தவிதம் மென்மையானதோ என்று எண்ணத்தோன்றுகிறது" என்று சந்தேகம் எழுப்பியிருக்கிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close