[X] Close

மது அருந்த பணம் தர மனைவி மறுப்பு: காஸ் சிலிண்டரை திறந்து வீட்டுக்கு தீ வைத்த தொழிலாளி


gas-cylinder

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 11:35 am
  • அ+ அ-

சேலத்தில் மது அருந்த மனைவி பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரத்தில் தொழிலாளி சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வீட்டுக்கு தீ வைத்தார். இதில், வீடு இடிந்து சேதமானது.

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காளியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (39). இவர் மனைவி, தாய் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் பட்டறையில் பணிபுரிந்து வருகிறார். மது அருந்தும் பழக்கம் உள்ள வெங்கடாசலம், நேற்று காலை மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதில் தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரம் அடைந்த வெங்கடாசலம் வீட்டின் சமையலறையில் இருந்த எரிவாயு சிலிண்டரை திறந்துவிட்டார். வீடு முழுவதும் காஸ் பரவிய நிலையில், அதிர்ச்சியடைந்த வெங்கடாசலத்தின் மனைவி குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். வெங்கடாசலமும் வீட்டுக்கு வெளியே வந்து, ஜன்னல் வழியாக தீயை பற்ற வைத்து சமையலறைக்குள் போட்டுள்ளார். இதில், சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

சேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள் வீடு முற்றிலும் எரிந்து பொருட்கள் சாம்பலானதுடன், வீடும் சேதம் அடைந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close