[X] Close

‘ஆளுநர் கையொப்பம் இடும்வரை பயணம் தொடரும்’: திருப்பூரில் அற்புதம்மாள் உறுதி


arpudhammal

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 11:34 am
  • அ+ அ-

ஏழு பேர் விடுதலைக்கான ஆணையில் தமிழக ஆளுநர் கையொப்பம் இடும்வரை என் பயணம் தொடரும் என திருப்பூரில் அற்புதம்மாள் தெரிவித்தார்.

எழுவர் விடுதலைக்கான மக்கள் சந்திப்பு இயக்கம் சார்பில் ‘அநீதியே 28 ஆண்டுகள் போதாதா?’ எனும் தலைப்பில், திருப்பூரில் நேற்று நடந்த கருத்தரங்கில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேசியதாவது:

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் விடுதலைக்காக ஒவ்வொரு மாவட்டமாக சென்று, ஆளுநர் ஏன் இன்னும் கையொப்பம்இடவில்லை என மக்களை சந்தித்து வருகிறேன். அதன் ஒருபகுதியாக 12-வது மாவட்டமாக திருப்பூர் வந்துள்ளேன்.

சட்டம் சொல்லியும், அரசு முடிவெடுத்தும் நியாயம் கிடைக்கவில்லை. ஆளுநர் கையொப்பம் இடாததால் மக்களை சந்திக்க வந்துள்ளேன். 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை பூரணமாக அனுபவித்து உள்ளனர். அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி சட்டவிதி 161-ன் படி, தமிழக அரசு ஆளுநர் கையொப்பத்துடன் விடுதலை செய்யலாம் என நீதிமன்றம் கூறியது. இந்த ஒரு வழக்கில் மட்டும் மூன்று முறை விடுதலை என நீதிமன்றம் அறிவித்த பின்னரும் 7 பேரும் சிறையிலேயே உள்ளனர்.

ஆளுநர் கையொப்பம் இடும் வரை என் பயணம் தொடரும். அமைச்சரவை கூடி முடிவெடுப்பதே தமிழக ஒட்டுமொத்த மக்களின் உணர்வு தான். ஆனால் அதைப்பற்றி ஆளுநர் யோசிப்பதே இல்லை. இந்த மக்கள் சந்திப்பு மூலம் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close