[X] Close

அபாயகரமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம்: வாட்ஸ் அப் புகார் மூலம் போலீஸார் நடவடிக்கை


cbe-mtc

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 11:30 am
  • அ+ அ-

கோவையில் அபாயகரமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநருக்கு வாட்ஸ் மூலம் வந்த புகாரை தொடர்ந்து, போலீஸாா் அபராதம் விதித்தனர்.

கோவை சிங்காநல்லூரில் இருந்து அவிநாசி சாலை ஹோப்காலேஜ் நிறுத்தத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று, கடந்த திங்கள் கிழமை அதிவேகத்தில் அபாயகரமாக சென்றது. இந்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் பயணித்தனர். மற்ற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் இந்த பேருந்து சென்றதை செல்போன் மூலம் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ வாட்ஸ் அப் மூலம் பரவியது. இந்த பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வாட்ஸ் அப் மூலம் மாநகரப் போக்குவரத்து போலீஸாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில், பீளமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட போக்குவரத்து காவலர் கார்த்திகேயன் நேற்று ஹோப்காலேஜ் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திங்கள்கிழமை அபாயகரமாக சென்ற அந்த தனியார் பேருந்து அங்கு வந்தது. போலீஸார் அந்த பேருந்தை நிறுத்தி, ஓட்டுநர் கணேசனை பிடித்து விசாரித்தனர். பின்னர், அபாயகரமாக பேருந்தை ஓட்டியதாக ஓட்டுநருக்கு ரூ. ஆயிரம், படிக்கட்டில் பயணம் செய்ய அனுமதித்ததாக நடத்துநருக்கு ரூ.100 என மொத்தம் ரூ.1,100 தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close