[X] Close

புதிய குவாரிகளை திறக்க முடியாததால் மணல் விலை உயர்வு; எம் சாண்ட் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை: பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்


the-new-price-quarries-can-not-be-opened-because-of-the-price-of-sand

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 08:46 am
  • அ+ அ-

புதிய குவாரிகளை திறக்க முடியாததால்தான் மணல் விலை அதிகரித்துள்ளது. எனவே, ஆற்றுமணல் பயன்பாட்டை குறைத்து எம்-சாண்டை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம் என்று முதல்வர் கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீது நடந்த விவாதம்:கே.ஆர்.ராமசாமி (சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்): ஆற்று மணல் விற்பனையை யார் நடத்துகிறார்கள், யாருக்கு அதில் பலன் கிடைக்கிறது, எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதை அரசு விளக்க வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: அரசுதான் இப்போது மணலை மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியாருக்கு கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் சில நேரங்களில் தடையாணை பெற்று விடுவதால், ஆற்றுப்படுகையில் இருக்கும் மணலை அள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அரசுதான் பொதுமக்களுக்கு தேவையான மணலை வழங்குகிறது. ஆனால், போதுமான அளவுக்கு குவாரி அமைக்க முடியவில்லை. பலர் பொதுநல வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் தடையாணை பெறுகின்றனர். இதனால் முழுமையான மணல் கொடுக்க முடியவில்லை. மணல் இறக்குமதிஇறக்குமதி செய்து, மணல் தேவைப்படுபவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனம் மறிமுதல் செய்யப்படுகிறது. குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கே.ஆர்.ராமசாமி: சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லோடு மணல் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனால், கட்டுமானப் பணிகள்பாதிக்கப்படுவதுடன், தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

முதல்வர் பழனிசாமி: பொதுநல வழக்கு தொடரப்படுவதால், மணல் அள்ள தடை விதிக்கப்படுகிறது. இதனால், புதிய குவாரிகளை திறக்க முடியவில்லை. எனவே, மணல் விலை அதிகரித்துள்ளது. முழுமையாக மணல் பயன்பாட்டை குறைக்க, எம் சாண்ட் உபயோகிப்பதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.ராமசாமி: மக்களுக்கு போதுமான அளவு மணல் கிடைக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல்வர் பழனிசாமி: அதற்காகத்தான் எம் சாண்ட் பயன்படுத்துமாறு அரசு கூறி வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். ஓடை, ஆற்றுப்படுகைகளில் மணல் எடுத்தால் நீராதாரம்பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில்கொண்டுதான் படிப்படியாக எம் சாண்ட் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பேரவையில் விவாதம் நடந்தது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close