[X] Close

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட் பிளாஸ்டிக் தடையை மீறினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்: பேரவையில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்


plastic-ban

கோப்புப்படம்

  • kamadenu
  • Posted: 14 Feb, 2019 08:33 am
  • அ+ அ-

பயன்படுத்தப்பட்ட, தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்தல், வழங்குதல், விற்பனை செய்தலுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்காக நகராட்சி, பஞ்சாயத்து சட்டத்திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்திய பின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஜன.1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றான இயற்கை சார்ந்த பொருட்களின் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் மற்றும் தண்டனை தொடர்பான எந்த அறிவிப்பும் தமிழக அரசால் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அபராதம் விதிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி, மாவட்ட நகராட்சி, கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாக்களை நேற்று தமிழக உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார்.

இச்சட்டத்திருத்தப்படி பயன்படுத்தப் பட்ட, தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல், மற்றும் பகிர்ந்தளித்தல் குற்றத்துக்கு முதல் தடவை ரூ.25 ஆயிரம், 2-ம் தடவை ரூ.50 ஆயிரம், 3-ம் தடவை ரூ.1 லட்சம் அபராதமாக விதிக்கப்பட உள்ளது.

வணிக வளாகங்கள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப் பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத் தப்பட்ட மற்றும் தூக்கி எறியப்பட்ட பிளாஸ் டிக்கை பயன்படுத்துதல், பகிர்ந்தளித்த லுக்கு முதல் முறை ரூ.10 ஆயிரம். 2-ம் முறை ரூ.15 ஆயிரம், 3-ம் முறை ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

மளிகை கடைகள், மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன் படுத்தினால், முதல் முறை ரூ.1000, 2-ம் முறை ரூ.2 ஆயிரம், 3-ம் முறை அதே குற் றத்தை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். சிறிய வணிக விற்பனை யாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் குற்றத்துக்கு முதல் தடவை ரூ.100-ம் 2-வது தடவை ரூ.200-ம் 3-ம் தடவை அதே குற்றத்தை செய்தால் ரூ.500-ம் அபராதமாக விதிக்கப்படும்.

முன்னதாக, ரூ.5, 10 மற்றும் ரூ.20 என்ற வகையில் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் இருந்த விதிகளை, தற்போது திருத்தி, அபராதத் தொகையை உயர்த்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து, விற்பவர்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், மருந்துக்கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்கள், சிறு வணிக விற்பனையாளர்கள் 4 வது முறையாக இதே குற்றத்தை செய்தால், அவர்களின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close