[X] Close

பொறுப்புகளுக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும்: மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கருத்து


women-need-to-have-a-lot-of-responsibilities

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 12:30 pm
  • அ+ அ-

பொறுப்புகளுக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும் என அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி தெரிவித்தார்.

காரைக்காலில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருநங்கைகளுக்கு மரியாதை அளிக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எனக்கு இந்த பொறுப்பைக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரக் குழுவிலும் எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் அனல் பறக்கும் வகையில் பிரசாரம் செய்வேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரியங்கா காந்தி குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ள கருத்து ஏற்கத்தக்கது அல்ல. பெண்களை ஒரு சக்தியாக பார்க்கும் பார்வைதான் வேண்டும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கட்சியிலும், ஆட்சியிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இடமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். பொறுப்புகளுக்கு பெண்கள் அதிகளவில் வர வேண்டும். பிரதமர் மோடி அறிவியல் பூர்வமாக ஊழல் செய்யும் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். ரஃபேல் முறைகேடு குறித்து ராகுல் கேட்ட கேள்விகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்களே தவிர, பதில் அளிக்க மறுக்கிறார்கள்.

தேர்தலை கருத்தில் கொண்டே வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ரூ.2 ஆயிரம் வழங்கப் படும் என அறிவித்துள்ளார். ஆனாலும், மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close