[X] Close

தமிழகத்தில் 17 ஆயிரம் இடங்களில் மின் திருட்டு: ரூ.65 கோடி அபராதம் வசூலிப்பு


electric-theft

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 12:08 pm
  • அ+ அ-

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு மொத்தம் 16,876 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.65.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய அமலாக்கப் பிரிவினர் தொடர் ஆய்வுகள், திடீர் ஆய்வுகள், இரவு நேர ஆய்வுகள், கூட்டு ஆய்வுகள் மூலம் மின் திருட்டுகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். 2018-ல் 16,876 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை ரூ.58.69 கோடி, கூடுதல் சமரசத் தொகை ரூ.6.83 கோடி என மொத்தம் ரூ.65.52 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரியில் மட்டும் 509 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை ரூ.3.49 கோடி, சமரச கூடுதல் தொகை ரூ.41 லட்சம் என மொத்தம் ரூ.3.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

மின் திருட்டு தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அருகில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள், அமலாக்கப் பிரிவு அலுவலகங்களில் தெரிவிக்கலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close