[X] Close

மெட்ரோ ரயிலில் கடந்த 2 நாட்களில் 4 லட்சம் பேர் பயணம்; இன்றும் இலவசமாக செல்லலாம் என நிர்வாகம் அறிவிப்பு


metro-train

மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய இலவசம் என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. இடம்; சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம். படம்: பு.க.பிரவீன்

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 12:02 pm
  • அ+ அ-

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த 2 நாட்களில் மட்டும் 4 லட்சம் பயணிகள் இலவசமாகப் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கான முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த 10-ம் தேதி முதல் மெட்ரோ ரயில்களின் முழுமையான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

ரயில் சேவையில் தடங்கல்இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, நேற்றுமுன்தினம் பயணிகள் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே அன்றைய தினம் சைதாப்பேட்டையில் சிக்னலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சின்னமலை-டிஎம்எஸ் இடையே ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது.

மெட்ரோ ரயிலில் முழுமையாக பயணம் செய்யலாம் என்று எதிர்பார்த்து குடும்பத்துடன் வந்தவர்கள் ஒரு பகுதி சேவை முடங்கியதால் வீட்டுக்குத் திரும்பிச் சென்றனர். இதனால் பொதுமக்கள் வசதிக்காக நேற்று மேலும் ஒருநாள் இலவச சேவை நீட்டிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்தனர். நேற்றும் மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசப் பயணம் செய்தனர். காலை முதல் இரவு வரை மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது. அலுவலகங்களில் பணிக்குச் செல்பவர்கள், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் முதல்முறையாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தவர்கள் என ஏராளமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் மெட்ரோ ரயிலில் சுமார் 4 லட்சம் பேர் இலவசப் பயணம் செய்தனர். இதனால், அண்ணாசாலையில் பேருந்துகளில் கூட்டம் குறைந்து காணப்பட்டது. அதேபோல், சாலைகளில் வாகன நெரிசலும் குறைவாக இருந்தது.

இன்றும் இலவசம்பயணிகள் இன்றும் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close