[X] Close

பிரதமர் பங்கேற்ற விழாக்களில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


national-anthem

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 11:57 am
  • அ+ அ-

மதுரை மற்றும் திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் சமூக ஆர்வலர் வேம்பு, பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “மத்திய, மாநில அரசு விழாக்களில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மதுரை அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 27-ம் தேதி நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், தேசிய கீதம் பாடப்படவில்லை.

இதுகுறித்து பிரதமரோ, முதல்வரோ வருத்தம் தெரிவிக்கவில்லை. அதேநேரம் தேசிய கீதம் பாடப்படாததற்கு தண்டனை வழங்கும் விதிகள் எதுவும் இல்லை. எனவே, இந்த விதிகளை உருவாக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். தேசிய கீதத்தை அவமதித்ததாக தமிழக தலைமை செயலாளருக்கு எதிராக நான் அனுப்பிய புகாரை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற விதிமுறைகளின்படி, பிரதமர், முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை’’ என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close