[X] Close

கள்ளத் துப்பாக்கி, கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட கொல்கத்தாவை சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது


counterfeit-gun-counterfeit-note

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 11:49 am
  • அ+ அ-

கள்ளத் துப்பாக்கி மற்றும் கள்ள நோட்டு வழக்கில் தேடப்பட்ட கொல்கத்தாவைச் சேர்ந்த இருவர் சென்னையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.

கள்ள நோட்டு மற்றும் கள்ளத் துப்பாக்கிகளை சிலர் வெளிநாட்டிலிருந்து மேற்கு வங்கத்துக்கு கடத்திவந்து, அங்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக அம்மாநில போலீஸாருக்கும், மத்திய உளவு (ஐ.பி) பிரிவு போலீஸாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தனிப்படை அமைத்து அம்மாநில போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக இது தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள எஸ்டிஎப் காவல் நிலைய போலீஸார் மேற்குவங்க மாநிலம் பீர்பூம் பகுதியைச் சேர்ந்த ஹசன்ஷேக் (26) மீது வழக்குப் பதிந்தனர். அவர் மீது 7-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.

போலீஸார் தேடுவதை அறிந்த ஹசன்ஷேக் அங்கிருந்து தப்பினார். இதைத்தொடர்ந்து அவரை கொல்கத்தாபோலீஸார் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தேடிவந்தனர். இந்நிலையில் அவர், சென்னை கிழக்குகடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், ராஜரத்தினம் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கொல்கத்தா போலீஸார் மத்திய உளவு பிரிவு ஆய்வாளர் இப்திகார் தலைமையில் எஸ்ஐகள் ராஜன், ஏழுமலை உள்ளிட்ட 11 பேர் அடங்கிய தனிப்படையினர் சென்னை வந்தனர். அவர்கள் நீலாங்கரை ஆய்வாளர் நடராஜனுடன் சென்று அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு நுழைந்தனர். அங்கு பதுங்கி இருந்த ஹசன்ஷேக்கை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவரது கூட்டாளியான மற்றொருவரை அம்பத்தூரில் கைது செய்தனர். 2 பேரும் உடனடியாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close