[X] Close

சிக்னல் பராமரிப்பு காரணமாக இன்று சில ரயில்கள் ரத்து


some-trains-canceled-due-to-signal-maintenance

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 11:41 am
  • அ+ அ-

சிக்னல் பராமரிப்பு காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் சில ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை ரயில் நிலைய யார்டில் சிக்னல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் தாம்பரம்-சென்னை கடற்கரை மின்சார ரயில் (40158), சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் (40155) ஆகியவை இன்று (13-ம் தேதி) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இரவு 11.10 மணிக்கு செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் (40574) இன்று செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close