[X] Close

முருகன்-நளினி தொடர் உண்ணாவிரதம் மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு


nalini-protest

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 11:37 am
  • அ+ அ-

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் மற்றும் அவரது மனைவி நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

இவர்களின் விடுதலை தொடர்பான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தங்களது விடுதலை தொடர்பான ஆவணத்தில் தமிழக ஆளுநர் காலம் கடத்துவதாகக் கூறி, வேலூர் ஆண்கள் சிறையில் முருகன் 6-வது நாளாகவும், பெண்கள் சிறையில் நளினி 4-வது நாளாகவும் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில், சிறை விதிகளை முருகனும், நளினியும் மீறியதால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுவதாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே மீண்டும் சலுகைகள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய முடியும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்காத நளினியும், முருகனும் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஆளுநர் தரப்பில் இருந்து பதில் வரும் வரை போராட்டத்தை தொடர்வதாக அவர்கள், சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று சிறைகளில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் முருகனும், நளினியும் உடல் சோர்ந்து காணப்படுவதாக தெரிவித்தனர். மேலும், அவர்களது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால், அங்கேயே மருத்துவ சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் சிறை வளாகத்திலேயே செய்யப்பட்டிருப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close