[X] Close

பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்


poondi-lake

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:57 am
  • அ+ அ-

ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், நேற்று முன்தினம் இரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் ஐதராபாத்தில் நடந்த கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தற்போது கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்க வாய்ப்பு இல்லை என ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஆந்திர விவசாயிகளின் தேவைக்காக கடந்த 2 வாரங்களாக கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா கால்வாயில் நீர் திறக்கப்படுகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 300 கன அடி என அளவில் திறக்கப்பட்டு, படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, கடந்த 9-ம் தேதி முதல் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி என்ற அளவில் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஜீரோ பாயின்ட்

ஆந்திர விவசாயிகளின் பயன்பாட்டுக்குப் போக மீதமுள்ள நீர், கடந்த 10-ம் தேதி மாலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் ‘ஜீரோ பாயின்ட்’க்கு வந்தடைந்தது. தொடக்கத்தில் விநாடிக்கு 10 கன அடியாக இருந்த நீரின் அளவு நேற்று மதிய நிலவரப்படி விநாடிக்கு 50 கன அடி அளவில் ஜீரோ பாயின்ட்டில் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா நீர், தாமரைகுப்பத்தில் இருந்து, 25 கி.மீ. தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தது. அப்போது விநாடிக்கு 15 கன அடி அளவில் வந்த நீர், நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 30 கன அடியாக உள்ளது என தமிழக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆந்திர விவசாயிகளுக்கான நீரின் தேவை படிப்படியாக குறையும்போது, பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close